நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் மோதி ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டடத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் டிராக்டர் கலப்பையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கலப்பையில் முத்துராஜ் மகன் நிஷாந்த் ஓடி வந்து மோதி உள்ளார். இதில் நிஷாந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நிஷாந்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நிஷாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு நிஷாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து மம்சாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.