Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி….. பெரும் சோக சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பங்களா தோட்டம் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு சுகாசினி(7) என்ற 3 ஆம் வகுப்பு படித்து வரும் பா மகளும், ரகுநந்தன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் புத்தக கடை மற்றும் தண்ணீர் பந்தலில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் எப்போதும் தன்னுடன் மகனையும் அழைத்துச் செல்வார்.அதனை போல நேற்றும் மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மகனை காணாமல் அக்கம்பக்கம் தேடி வந்துள்ளார். சிறிது நேரம் கழித்த பிறகு ஆசிரமத்தின் உள்ளே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உடற்கூறு பரிசோதனைக்கு சிறுவனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து அவினாசி போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |