தமிழகத்தில் சுமார் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயிலும் 36 லட்சம் தமிழக முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையது கண்டறியப்பட்டுள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காது கேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை சீர் செய்யும் வகையில் சிறப்பு இனிப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். குழந்தைகள் கடுமையான பாதிப்பு மற்றும் நடுத்தரமான பாதிப்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊட்டச்சத்து அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.