திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிப்பவர் சதாம் உசேன். இவருடைய இரண்டு வயது மகன் சூபியன். சதாம் உசேன் குடும்பத்தாரோடு சம்பவத்தன்று வெளியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் குழந்தை சூபியன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது குழந்தை மீது டிவி விழுந்துள்ளது.
இதில் குழந்தையின் அலர சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் தலையில் டிவி விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.