திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சீஸ்வரன் ( வயது 3 ) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று காலை இந்த சிறுவன் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்டிருக்கிறான். அப்போது தொண்டையில் ஒரு துண்டு சிக்கிக் கொண்டது.
இதனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்துள்ளான். இதையடுத்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஞ்சீஸ்வரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.