Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை சாய்தருக்கு உடல் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு தாய் மகாலெட்சுமி சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார். மறுநாள் காலை மகாலெட்சுமி குழந்தைக்கு மீண்டும் காலை உணவாக நூடுல்ஸை எடுத்து கொடுத்துள்ளார்.

இதனை உண்ட குழந்தை அன்று மதியம்வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை குழந்தை திடீரென வாத்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Categories

Tech |