திருச்சி காமராஜ் நகரைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீராம். இவருக்கு 13 வயது. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள சிறுவர்களோடு சேர்ந்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவன் ஸ்ரீராம் தீயில் பலாக்கொட்டை சுடுவதற்காக நெருப்பை மூட்ட வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளார்.
அப்போது ஸ்ரீராம் மீது தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீயில் சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.