Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பால்கனி கம்பிக்குள் குழந்தையின் தலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் கடை பகுதியில் விஜய் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிப்ரியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பால்கனியில் உள்ள இரும்பு கம்பியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே குழந்தையின் தலை திடீரென சிக்கிக் கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை சிக்கி தவித்தது.

இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கம்பியை வளைத்து பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஓரிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பெற்றோர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடமாகும்.

Categories

Tech |