Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பிறந்து 2 நாளே ஆன குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்…. உச்சகட்ட கொடூரம்….!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்றை தெருநாய்கள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பெறும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பானிபட் நகரில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தாய் மற்றும் உறவினர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்குள் புகுந்த நாய்கள் குழந்தையை இழுத்துச் சென்று கடித்து குதறின.

பிறகு நள்ளிரவில் குழந்தையை காணாமல் தேடிய போது மருத்துவமனைக்கு வெளியே நாய்கள் குழந்தையை கழித்து கொண்டிருப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விபரீதமான சம்பவத்திற்கு மருத்துவமனை அலட்சியமே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் கூறப்படவில்லை. இருந்தாலும் பெற்றோர்கள் அருகில் இருக்கும் குழந்தையை சற்று கவனமுடன் பார்த்து இருக்க வேண்டும் என்பதும் இதில் கவனிக்கத்தக்க ஒன்றுதான்.

Categories

Tech |