Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் எச்சரிக்கை…!!!!!!

பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி இருக்கின்ற நிலையில் பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஸ்விங் ஆகும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில்  வெகு நேரமாகியும் எந்த சத்தமும் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அந்த ஊஞ்சல் கயிற்றில் சிறுமி சிக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமியை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி காவலர்கள் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலத்தை  பதிவு செய்திருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஊஞ்சல் கயிற்றில் சிக்கி குழந்தைகள் பலியான சம்பவம் நடந்திருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலராலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |