அமெரிக்காவில் ஆண்குழந்தை ஒன்று குரங்கு பொம்மையிலுள்ள பேட்டரியை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் chiristino மற்றும் hugd என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் mc mahon என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை V Tech நிறுவனம் தயாரித்த குரங்கு பொம்மை ஒன்றிலுள்ள LR44 ரக பேட்டரியை விழுங்கியுள்ளது. இதனையடுத்து அந்த பேட்டரி தொண்டையில் சிக்கி எரிந்துள்ளது.
இதனால் அந்த குழந்தையின் இதயத்தில் துளை ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் வேதனையிலிருக்கும் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தன் மகனின் இழப்பிற்கு காரணமாக உள்ள நிறுவனத்தை மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் குழந்தையின் மரணம் தொடர்பாக எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை.