Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. மாடியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன்…. துடி துடிக்க கீழே விழுந்து மரணம்…. என்ன நிகழ்ந்தது?….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின் கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நேதாஜி நகரில் வீட்டின் மாடியில் நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதுஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப் பிடிக்க முயற்சி செய்துள்ளான்.

அச்சமயம் மாடியை ஒட்டிச் சென்ற மின்கம்பியில் சிறுவனின் கை பட்டு விட்டது. இதையடுத்து சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து மாடியிலிருந்து துடிதுடித்த பாரு கீழே விழுந்தான். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |