Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ரோஸ் மில்க் குடித்த கொஞ்ச நேரத்தில்…. பலியான சிறுவன்….!!!!

சென்னை கண்ணகி நகர்-ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுவன் வசந்தகுமார் அப்பகுதியில் உள்ள பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் சிறுவன் வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்ட போது ரோஸ்மில்க் வாங்கி குடித்ததிலிருந்து வாந்தியாகவும் மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே திவ்யா தனது மகன் வசந்தகுமாரை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா, இது குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் பெத்துராஜ் என்பவர் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் பெத்துராஜிடம் சென்று விசாரணை நடத்தினர்.

Categories

Tech |