Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே உஷார்”…. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நேர்ந்த விபரீதம்… பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்தது என்ன…?

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி எனும் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் கீர்த்தனா(17). இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றிருக்கின்றார். அதன்பின் கிணற்றின் விளிம்பில் நின்ற கீர்த்தனா செல்போனில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் மனோ என்பவரை தொடர்பு கொண்டு நான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன் என தெரிவித்துள்ளார். அப்போது செல்போனை  வீசிவிட்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இதனால் பதறிப்போன மனோஜ் இதுபற்றி அவரது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து இருக்கின்றார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கிணற்றின் அருகே செல்போன் கிடைத்திருக்கின்றது. ஆனால் மாணவி இல்லை இதனை அடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் குதித்து தேடினர். நீண்ட நேரத்திற்குப் பின் கீர்த்தனாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட மீட்கப்பட்டுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக   தனது தோழிகளுடன்  ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சல் அடைந்த கீர்த்தனா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |