நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதனால் அப்போது ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள 15 வயது சிறுவனுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆறு மாதங்களில் அந்த மாணவனின் நடவடிக்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அதில் தூக்கமின்மை, படிப்பில் தோல்வி, கடும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் உடனே மனநல ஆலோசகரிடம் சிறுவனை அழைத்துச் சென்றனர். அப்போது அச்சிறுவன் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிமையாகிவிட்டான் என்பது தெரியவந்தது. இது குறித்து மனநல மருத்துவர் கூறியது, நாடு முழுவதும் ஆன்லைனில் விளையாட்டுகளில் அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வாரத்திற்குள் 10 சிறுவர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள். சிறுவர்கள் ஆன்லைனில் விளையாடுவதால் வெளியே சென்று விளையாட செல்ல விரும்ப மாட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 300 மில்லியன் ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளது. அகில இந்திய கேமிங் பெடரேஷனின் கூற்றுப்படி, இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குள் ஆன்லைன் விளையாட்டுகள் 15,500,00,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். இதனால் மாணவர்களின் கற்றல்திறன் குறையத் தொடங்கும். மாணவர்களை அடிமையாக்கும் .ஆன்லைன் விளையாட்டில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டியது கட்டாயம் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.