புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இன்று முதல் 25ஆம் தேதி வரை 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கூடிய காய்ச்சல் சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 25-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலின் வீரியத்தை பொறுத்து விடுமுறை நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.