Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 2 சொட்டு விளக்கெண்ணெய்…. 1 மாத குழந்தை உயிரிழந்த சோகம்….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சாந்தி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நவம்பர் 16ஆம் தேதி அன்று வயிற்றை சுத்தம் செய்கிறேன் என்று சாந்தி, குழந்தைக்கு 2 சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து குழந்தையை, சாந்தி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பின் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |