புனேவில் 4 வயது பெண் குழந்தையை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ஆம் தேதி குழந்தையின் வீட்டிற்கு அருகில் இருந்த 12 வயது சிறுவன், 4 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த குழந்தையும் சாக்லேட் ஆசையில் அந்த சிறுவனின் பின்னால் சென்றுள்ளது. யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதற்குள் குழந்தையை நீண்ட நேரமாக காணவில்லை என்று பதறிய பெற்றோர்,ஒரு இடத்தில் அந்த சிறுவன் தன் மகள் இடத்தில் தவறாக நடப்பது போல் நடந்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையின் தாயார் சத்தமிட, சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டான். அதன்பிறகு குழந்தையை மீட்ட தாய், போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறுவன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே பெற்றோர்களே குழந்தைகளை எப்போதும் கண்காணியுங்கள்.