Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 5 வயது பெண் குழந்தை… குப்பைக்கு வைத்த தீயில் கருகிய கொடூரம்…!!!

பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அச்சமயத்தில் குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே கொட்டி கிடந்த குப்பைகளுக்கு தீ வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது குப்பையிலிருந்து ஏற்பட்ட தீ எதிர்பாராதவிதமாக குழந்தை வித்ய பாரதியின் உடையில் பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக தீயை அணைத்து குழந்தையை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |