நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சில செல்போன் செயலிகள் துணை போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் செல்போன் செயலிகள் எது என்பதை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், “சைபர் வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் பேசினார்கள். கருத்தரங்கத்தில் டோரண்டோவில் இல்ல சைபர் புலனாய்வு பிரிவு தலைவர் கெய்த் எலியட் பேசினார்.
இதனடிப்படையில் முதலாவதாக’ஐ. எம். வி. யு.’என்ற செயலியை அவர் தெரிவித்துள்ளார். 3 டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த செயலி பாலியல் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்னும் அவர் பல செயலிகளின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அச் செயலின் பெயர்கள் ‘விஸ்பர்’, ‘கிக்ஸ்’ ‘ திண்டர் டேட்டிங் செயலி’, ‘ஓகேகியுபிட’, மற்றும் ‘சாட்ஸ்பின்’, ‘இது போன்ற செயலிகள் செல்போன் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனை குழந்தைகள் யாரும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்றும் இதனை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் .
இந்தச் செயலியில் மூலமாக இளம் வயதினர், ரகசியங்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுத்து அதனை பயன்படுத்தாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் என்று கெய்த் ஏலியட் கருத்தரங்கத்தில் கூறினார். எனவே கைப்பேசியில் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் பல பாலியல் வன்கொடுமைகளுக்கு இதுபோன்ற செயலிகள் தான் அதிக காரணம் என்பதால் கருத்தரங்கத்தில் ‘கெய்த் ஏலியட்’ உரையாடியுள்ளார்.