தமிழகத்தில் தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிவதால் குழந்தைகளை அங்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தேவகோட்டை அருகே பூண்டி கிராமத்தில் கண்மாயில் குளித்த மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், படைப்பின் நீர்நிலைகளிலும் நீர் நிரம்பி வழிகிறது. எனவே பெற்றோர்கள் ஏரி மற்றும் கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.