கடந்த புதன்கிழமை அன்று லண்டனில் உள்ள Greenwich-ல் பள்ளி சீருடையில் இருந்த மாணவியை ( 16 வயது ) மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதேபோல் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 17 வயது மாணவி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஜியோப் வாரேன் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதாவது, “இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு அந்த நபர் ஒரே ஆளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். மேலும் குழந்தைகளுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பெற்றோர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.