Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க!…. “குழந்தையின் உணவு குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்”…. அதிர்ச்சி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் காமராஜர் நகரில் வசித்து வரும் பாபு என்பவரது 3 வயது மகன் சக்தி கடந்த 1-ஆம் தேதி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பின்னர் தவறுதலாக அந்த சிறுவன் நாணயத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த சிறுவனை அவருடைய பெற்றோர் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உணவுக்குழாயின் கீழ் பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மயக்கவியல் டாக்டர் பாஷா, டாக்டர் காமாட்சி சந்திரன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை இன்றி சிறுவனின் உணவு குழாயின் அடியில் சிக்கி இருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை அகற்றியுள்ளனர். தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |