Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம் : அதிகரிக்கும் தற்கொலைகள்….. பத்திரமா பார்த்துக்கோங்க….. மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் அதிக அளவில் தற்கொலைகள் அதிகரிப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் அனைவரும் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் பள்ளி சிறுவர்கள் இதனை அதிக அளவு விளையாடுகிறார்கள். ஆன்லைன் விளையாட்டின் காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து மனநல மருத்துவர்கள் கூறுகையில், “பெற்றோர்கள் நேரம் எடுத்து பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் சென்று நேரம் செலவிட வேண்டும். இந்த விளையாட்டுக்களில் சிக்கி உள்ள இளைஞர்களை மீட்டெடுக்க ஆலோசனை மையங்கள் அரசால் தொடங்கப்பட வேண்டும்” என்று கூறுகின்றனர்.

Categories

Tech |