Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்! காருக்குள் இருந்த தந்தை…. ஓடி வந்த குழந்தை…. கதிகலங்க வைக்கும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தை ஒருவர் காரை எடுக்கும் பொழுது காருக்கு  பின்னால் தன் மகன் நிற்பதை பார்க்காமல் காரை இயக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள காரை சிறுவனின் தந்தை எடுக்கப்போகிறார். அப்பொழுது அவருக்கு பின்னால் 4 வயது மகன் ஓடி வருகிறார். ஆனால் அவர் தன்னுடைய மகன் வருவதை கவனிக்காமல் காருக்குள் சென்று விடுகிறார்.

இதனையடுத்து சிறுவன் காரை சுற்றி அங்குமிங்குமாய் ஓடுகிறார். பின்னர் காரின் முன்பகுதியில் சிறுவன் வரும்பொழுது சிறுவனின் தந்தை அதை கவனிக்காமல் காரை முன்பக்கமாக இயக்கியுள்ளார். அப்போது கார் மகன் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து உடனே சுதாரித்துக் கொண்ட தந்தை காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து சிறுவனை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வருகிறார். இந்த வீடியோ காண்போரை கதிகலங்க செய்கிறது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று போது பாதி வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |