Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்…! தின்னரை குடித்ததால்…. 10 மாத குழந்தை பரிதாப பலி…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் அறிவழகன்- பரமேஸ்வரி. அறிவழகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது குழந்தை மற்றும் கிஷ்வந்த் என்ற பத்து மாத குழந்தை என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி நேற்று முன்தினம் கோவில் திருவிழாவிற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளர்.

அப்போது 4 மணி அளவில் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஷ்வந்த் வீட்டுக்கு வர்ணம் பூசும் பெயிண்டுடன் வைத்திருந்த தின்னரை குடித்து மயங்கி உள்ளது. இதையடுத்து குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் மருந்து பொருட்களை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

Categories

Tech |