Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்…! தூக்கம் குறைவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு…. வல்லுனர்கள் தகவல்….!!!!

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவை போன்று உறக்கம் மிக அவசியம். ஆனால் இந்த உறக்கத்தின் பற்றாக்குறையினால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்புக்கும் அதிகமாக உள்ளாகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறியதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதையடுத்து உறக்கம் நேரமும் மாறி ,மாறி வருகிறது. இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சரியான உறக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், படிப்பில் பின்னடைவு ,கோபம் ,விளையாட்டில் ஆர்வமின்மை, அதிகமான பிடிவாதம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனை தொடர்பாக குழந்தைகள் வல்லுனர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

அதாவது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக தூக்கமில்லாத குழந்தைகளுக்கு நோய் பாதிப்பானது அதிகம் ஏற்படுகிறது. இதனால் பிடிவாத குணம், அதிகம் பயம், கோபம், பாதுகாப்பின்மை உணர்வு, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது, தற்போது சமீப காலமாக தொடர்ந்து வந்த கொரோனா பாதிப்பினால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையானது மாறியுள்ளது.

அதன்படி உறங்குவது ,உண்பது, காலையில் எழுவது என அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆய்வாளரின் கணிப்பின்படி,

பச்சிளம் குழந்தைகள்,12 — 18 மணி நேரம் உறங்க வேண்டும். 1 – 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 12 — 14 மணி நேரம் துாங்க வேண்டும்.

மேலும், 3 – 5 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 11 — 13 மணி நேரம்; பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, 10 — 11 மணி நேரம் உறக்கம் அவசியம்.

ஆனால் 9 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, எட்டு மணி நேரம் உறக்கம் போதுமனது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |