பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது இருந்தே காது கொடுத்து கேட்பது உங்களுக்கு தான் நல்லது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் முயல்வதே இல்லை மாறாக, குழந்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாகவே குழந்தைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது நீங்கள் கேட்காமல் இருந்தால் பின்னர் பெரிய விஷயங்களை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அது உங்களுக்கு தான் ஆபத்தாக முடியும். அதனால் சிறு வயதிலிருந்தே குழந்தைகள் உங்களிடம் என்ன சொல்ல வருகிறது என்பதை, அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி கேளுங்கள்.