நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கும் நிறுவனமான UIDAI, நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. சென்ற 10 வருடங்களில் மீண்டும் ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்காத குடிமக்கள் தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என UIDAI கூறியுள்ளது.
ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய விபரங்களைப் புதுப்பிக்க ரூபாய்.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர்த்து உங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விபரங்களை அப்டேட் செய்தால் அதற்கு ரூபாய்.100 செலவு ஆகும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் நீலநிறத்தில் இருக்கும். இது பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. குழந்தைகளின் ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, 5 வயது மற்றும் 15 வயதில் குழந்தையின் ஆதார் கார்டை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும். 5, 15 வயதில் குழந்தையின் ஆதார்கார்டை புதுப்பிக்க கட்டணமில்லை என்பது கவனிக்கத்தக்கது.