Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. சாவிகளை மறைத்து விட்டீர்களா?…. ராமதாஸ் கிண்டல்…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வீட்டையும், கேட்டையும் பூட்டி அவற்றின் சாவிகளை பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்து விட்டீர்களா பெற்றோர்களே” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |