நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories