சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
சென்னையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த சின்மயி, பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளார். அவரது ட்வீட்டில், “பெற்றோர்களே பிள்ளைகளுடன் பேசுங்கள். பள்ளிகளில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என விசாரியுங்கள். பயமோ அல்லது நடத்தையில் மாற்றமோ இருக்கிறதா என்பதை கவனியுங்கள்” என சின்மயி கோரிக்கை வைத்துள்ளார்.