பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது புகார் அளிக்க தயங்கக் கூடாது. மேலும் காவல் துறையும், சமூக நலத்துறை மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.