Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இருந்தால்…. உடனே தெரியப்படுத்தவும் -ஏபி.முருகானந்தம் டுவிட்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த ஏழை, எளிய குழந்தைகள் யாராவது இருந்தால் பகிரவும். உதவுவோம் என பாஜக இளைஞரணி துணை தலைவர் ஏபி.முருகானந்தம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம் இதற்காக உதவிகள் செய்து வருகின்றது. நானும் தனிப்பட்ட முறையில் உதவி செய்ய முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |