இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.