Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி தான் கடைசி நாள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 1992 முதல் 1993 மற்றும் 2000 முதல் 2001 வரை முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதிக்கழகத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா  1,500 மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் 3000 ஆயிரத்திற்கான பத்திரம் வழங்கப்பட்டது.

இந்த தொகையை பெற்று கொண்டவர்கள் தவிர அனைவரும் வருகின்ற ஜூன் மாதம் 16-ஆம் தேதிக்குள் முதலீட்டு பத்திரத்தின் நகல், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பெண் குழந்தையின் புகைப்படம், தாயின் புகைப்படம், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று  விண்ணப்பிக்கலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |