Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோர்கள் லட்சக்கணக்கில் செலவு செஞ்சி படிக்க வைக்கிறாங்க… ஆனா நீங்க… ரசிகருக்கு அட்வைஸ் செய்த நடிகை…!!!

நடிகை அனைகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அனைகா. இதை தொடர்ந்து இவர் கீ, செம போதை ஆகாதே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அனைகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் ‘உங்களது ஆசைகள், ரகசியங்களை என்னிடம் பகிரலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர் ஒருவர் சேர் புகைப்படத்தை பகிர்ந்து ‘உங்களைப் போன்ற அழகான பெண்கள் உட்காரும் நாற்காலியாக இருக்க விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகை அனைகா ‘உங்களுடைய பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைத்து உங்களை டாக்டர், இன்ஜினியராக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் ரூ.200 சேராக இருக்க ஆசைப்படுகிறீர்களே’ என பதிலளித்துள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |