Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… பரிசோதனையில் வெளிவந்த உண்மை…!!

கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள சித்தார்பட்டியில் சக்திகுமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் தோட்டத்தில் பணியாற்று வரும் இவர் குடும்பத்துடன் குருவியம்மாள்புரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் ரிஷிகேசவன் அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் ரிஷிகேசவனை கண்டுபிடிக்க முடியாததால் சக்திகுமரவேல் க.விலக்கு காவல்நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குரும்பபட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் அருகே இருக்கும் குட்டையில் சிறுவனின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தியது குட்டையில் இருந்த நீரில் உயிரிழந்து கிடந்த சிறுவன் காணமல் போன ரிஷிகேஷவன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுவனின் உடலை உடற்கூராவிர்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் ரிஷிகேஷவனுக்கு வலிப்பு நோய் இருந்ததும், சம்பவத்தன்று வலிப்பு ஏற்பட்டு கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. வலிப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |