தமிழகத்தில் தற்போது 2 வருடத்திற்கு பின் கொரோனா தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த வருடம் கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்பின் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்னும் சில தினங்களில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் பொதுத்தேர்வுகள் அல்லாத பிற வகுப்பு மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி வரும் காரணத்தால் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க இருப்பதாக தமிழ்நாடு அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது. இதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அத்துடன் அடுத்த கல்வியாண்டுக்கான (2022 – 2023) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாக வரவுள்ள கல்வி வருடங்களில் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் -ஆசிரியர் – மாணவர் சந்திப்பு கட்டாயமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் கீழ் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் கொரோனா காலக்கட்டத்தில் செயல்படாமல் இருந்த இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் மீண்டுமாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.