Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. புதுப்பெண் கடத்தல்….. தந்தை உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில்  சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை  திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி இருந்தபோது கோமதியின் தாத்தா பவுன் பாண்டியன், சித்தப்பா அனில், தாயார் ராஜம்மாள், சித்தி அனிதா உள்பட 10 பேர் கோமதியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர் முருகன் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் போலீசார் பாண்டி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |