காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோவையில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்தது தெரியவந்தது. அதே மில்லில் வேலை பார்த்த தமிழ்ச்செல்வி(20) என்ற பெண்ணை இரு வீட்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி சென்னையில் வைத்து கார்த்திக் திருமணம் செய்துள்ளார்.
இதனை அடுத்து கூடலூர் இருக்கும் பாட்டி வீட்டில் கார்த்தி தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி திரிந்த கார்த்திக்கை தமிழ்ச்செல்வி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.