காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்த முனியாண்டியும், லட்சுமியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கட்டிட வேலைக்கு சென்று வந்த முனியாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் லட்சுமி தனது கணவரை கண்டித்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த முனியாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.