Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதுவும் சொல்லல… சிறுமிக்கு நடந்த பிரசவம்… கைது செய்யப்பட்ட தாய்மாமன்…!!

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய தாய்மாமன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிபடிப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனை இவர்களது பெற்றோர்கள் யாரும் எதிர்க்காத நிலையில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான சிறுமிக்கு நேற்று முன்தினம் வயிறு வலி ஏற்பட்டதால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று சிறுமிக்கு பிரசவம் நடந்ததில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் குழந்தை திருமணம் நடந்துள்ளதாக நாமக்கல் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாய்மாமனுடன் திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதன்பின் மங்களபுரம் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கே.ஆர். மணி மற்றும் காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்த தாய் மாமனை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோர் உட்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |