Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கூறிய “காரணம்”…. காதலனுடன் விஷம் குடித்த பள்ளி மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபரஹள்ளி பகுதியில் ஆனந்த்- மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதுடைய அனுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியும் உறவினரான சவுந்தரராஜன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் சௌந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சௌந்தரராஜன் தங்களது மகளை கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் கடந்த 26-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |