Categories
மாநில செய்திகள்

“பெற்றோர் பார்க்கணும்” தமிழக பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் குழந்தைகள் கற்பதை பெற்றோர்கள் அறியும் வகையில் வகுப்பறையை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக் கருவிகள் மூலம் குழந்தைகள் கற்பதை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். மேலும் இப்பொழுது பருவ இறுதியில் மேற்கொள்ளப்படும் தொகுதிக்குறி மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

Categories

Tech |