ஈரோடு அருகே பெற்றோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு அருகே ராமலிங்கம் என்பவர் தனது மனைவி ரஞ்சிதாவை சத்தி எனக்கூறி அவரது தோழி சசிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் தனது இரு குழந்தைகளை ஹார்பிக் குடிக்க வைத்தும் உடலில் மிளகாய்பொடி தடவி வெயிலில் படுக்க வைத்து சித்திரவதை செய்துள்ளார். பக்தி முற்றியதால் நரபலி கொடுக்க முடிவு செய்து மூவரும் பேசியதைக் கேட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பி தனது தாத்தா வீட்டில் தஞ்சம் புகுந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.