Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்ற குழந்தையை இரக்கமில்லாமல்…. “எல்லாம் காதல் படுத்தும் பாடு” அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன்-சரோஜினி. இவர்களுக்கு  இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நிவ்யாஸ்ரீ இறந்துள்ளதையடுத்து சந்தேகமடைந்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறை விசாரணையில் குழந்தையை தாய் சரோஜினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் ஒருவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாகவும், தங்களுடைய காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் சரோஜினி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |