மயிலாடுதுறையில்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியிடம் தாய் விசாரித்ததில் ஈஸ்வரன் கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாய் அளித்த புகாரில் புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறை தந்தையான ஈஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.