Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார் இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 16 வருடம் ஜெயில் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |