மராட்டிய மாநிலம் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் எனும் கிராமத்தில் சுரேஷ் ஹூக்ஹி (27) வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதனிடையில் 3-ம் பெண் குழந்தைகள் என்பதால் சுரேஷ் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் காவேரி நடத்தை மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே சண்டை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவேரி தனது வீட்டைவிட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக கோபமடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த தனது 1 வயது பெண் குழந்தையை அருகில் உள்ள வயல்வெளியில் உயிரோடு குழி தோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்ற காவேரி மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள்களில் ஒருவரை காணவில்லை என்பதை அறிந்தார். அதன்பின் இது குறித்து காவேரி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சுரேஷ் தனது குழந்தையை வயல்வெளியில் புதைத்த கொடூர சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சுரேஷ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.